மாம் (ஹிந்தி)
ஆர்யா என்னை, 'மேடம்'னு தான் கூப்பிடுவா; அவளை பொறுத்தவரை, நான் அவ அப்பாவோட இரண்டாவது மனைவி மட்டும் தான்; இறந்து போன அவ அம்மாவுக்கு நான் மாற்று கிடையாதுங்கிறது அவ நம்பிக்கை!அன்னைக்கு... என் கையில இருந்த துப்பாக்கி அவனை குறி பார்த்து இருந்தது; நாலு பேர்ல மிஞ்சியிருந்த கடைசி மிருகம்.'ம்ம்ம்... சுடுங்க தேவகி... ஆர்யாவை சிதைச்சவனுக்கு உங்க கையால தண்டனை கொடுங்க!' - விசாரணை அதிகாரி பிரான்சிஸ் கத்தினார்.'ஏய்... ஏய்... சார்லஸுக்கு விஷம் வைச்சு கொன்னதும், அந்த பழியை மொஹித் மேல போட்டு ஜெயிலுக்கு அனுப்பினதும், பாபுராம் ஆணுறுப்பை அறுத்து கொன்னதும் இவ தான்... இவ தான்!' - உயிர் பயத்துல அலறுச்சு மிருகம்.'தெரியும்டா; தேவகி... இப்ப முடியாம போனா எப்பவும் முடியாது; தயவுசெய்து சுடுங்க!' - பிரான்சிஸ்.என்னால அவனை சுட முடியலை; கை நடுங்குது; அப்போ தான், என் பக்கவாட்டுல இருந்து அந்த குரல்...'அம்மா...'ட்ரிக்கரை விடாம அழுத்தினேன்; குண்டுகள் தீர்ந்ததுக்கப்புறமும்... டப்... டப்... டப்... ட்ரிக்கரை அழுத்திட்டே இருந்தேன். அந்த மிருகம் அடங்கினதும், கிட்டே வந்து ஆர்யா சொன்னா...'லவ் யூ மாம்!'