நிழல் பேசும் நிஜம் - பாலா (ஹிந்தி)
'போட்டோவுல ஏன் என் தோலை வெள்ளையா மாத்தினே பாலா' கோபமா கேட்டா என் தோழி.'லத்திகா... நான் உனக்கு நல்லது பண்ணியிருக்கேன். நிஜத்துல நீ கருப்பா இருக்குறேல்ல; அதான், உன் தோலை வெள்ளையா மாத்தி அழகாக்கினேன்!''இல்ல பாலா... எனக்கான நல்லது, கெட்டதை நான் முடிவு பண்ணிக்கிறேன். உன் தலை வழுக்கையை மறைக்க நீ, 'விக்' மாட்டியிருக்கலாம். ஆனா, என் தோல் நிறத்தை நினைச்சு என்னைக்குமே நான் வருத்தப்பட்டதில்லை. புரிஞ்சுக்கோ பாலா... நம்ம உருவத்தை நாம ஏத்துக்கிட்டு நேசிக்கப் பழகணும்!' லத்திகாவோட இந்த வார்த்தைகள், அன்னைக்கு என்னை பாதிக்கலை. ஒருநாள்... என் மனைவிகிட்டே இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தது. என் தலை வழுக்கையை சொல்லாம மறைச்சதே காரணம்னு நோட்டீஸ்ல இருந்தது. நீதிமன்றத்துல என் மனைவி என்கிட்டே கேட்டா...'வீட்டுல இருக்குற நிலைக்கண்ணாடியோட மேல் பகுதியை பேப்பர் ஒட்டி மறைச்சிருக்கீங்க; அப்போ, உங்களுக்கே உங்க நிஜ தோற்றம் பிடிக்கலை; அப்புறம் எப்படி நான் உங்களை ஏத்துக்குவேன்னு எதிர்பார்த்தீங்க?'என்கிட்டே பதில் இல்லை. என் தோழி லத்திகாவை தேடிப் போனேன். என் தோற்றத்தை நான் ஏத்துக்க காரணமான அவ எதிர்ல நின்னு சந்தோஷமா சொன்னேன்...'கண்ணாடி முன்னால என்னை தைரியமா நிற்க வைச்சதுக்கு நன்றி லத்திகா!'