உள்ளூர் செய்திகள்

நிழல் தரும் நிஜம்!

விதை மாதிரி பெண் முளைச்சு வரணுமே தவிர முடங்கிடக் கூடாது!எம்.ஜெ.ஆர்., கூட நான் சினிமாவுல நடிக்கக் கூடாதுன்னு சிலர் நினைச்சாங்க. பாதி கதையில என் கதாபாத்திரம் இறக்கிறது மாதிரி மாத்துனாங்க; வாய்ப்புகளை பறிச்சு எனக்கு குழி பறிச்சாங்க. ஒரு பெண்ணா என்னோட அழுத்தமான இருப்பை அவங்களால ஏத்துக்க முடியலை.எம்.ஜெ.ஆர்., மனசுல எனக்குன்னு ஒரு இடம் இருந்தது. ஆனா 'ஜெயா உடனான உறவு உங்க அரசியல் பயணத்துக்கு நல்லதில்லை'ன்னு சொல்லி அந்த இடத்தை இல்லாம ஆக்கினாங்க. ஒரு பெண் மனசை அவங்களுக்கு மதிக்கத் தெரியலை.அரசியல் களத்துல 'தோற்கிற குதிரை'ன்னு சொந்த கட்சியினரே என்மேல முத்திரை குத்தினாங்க. ஆனா, கட்சிக்கு என்னால நல்லது நடக்குறப்போ 'சீனியர்களை மதிக்கலை'ன்னு ஒதுக்கி வைச்சாங்க. ஒரு பெண்ணோட திறமையை அவங்களுக்கு அங்கீகரிக்க மனசில்லை. பொறுப்புள்ள பதவிக்கு நான் வந்த பிறகும் சொந்த கட்சி அமைச்சர்களே, 'ஒரு பொம்பளைக்கு என்னய்யா அரசியல் தெரியும்'னு பேசினாங்க. 'சினிமா, அரசியல்'னு களம் எதுவானாலும் 'பெண்'ங்கிற பாலின அடிப்படையிலேயே நான் எடை போடப்பட்டேன்; எதிரிகள் அதை என் பலவீனமா மாத்த முயற்சி பண்ணினாங்க! ஆனா... நான் அதை பலமா நினைச்சேன்; அதனாலதான்... 'ஜெ.ஜெயா எனும் நான்...'னு முதல்வரா பதவி ஏற்க முடிஞ்சது.படம்: தலைவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !