உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம்

நான் கீதா ராணி. ஆர்.புதுார், அரசினர் மேல்நிலைப் பள்ளியோட தலைமை ஆசிரியை. சீதா, தீபிகா, பர்ஹானா, ஆசிபா, சித்ரா; இவங்க என் பள்ளி மாணவியர். பெரும்பாலும், என் மதிய உணவு இடைவேளை இவங்க கூட தான். ஒருநாள்...'எதையோ எல்லாரும் என்கிட்டே மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; சரிதானே?''இப்ப நீங்க எங்களோட ப்ரெண்ட்... டீச்சர் இல்ல; ஓகேன்னா சொல்றோம்!''சரி... சொல்லுங்க!''எங்க பேருந்துல ஒரு பையன் வர்றான்; அவன் பர்ஹானாவை பார்த்து சிரிக்கிறான்; இப்ப இவளும் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிட்டா!''ஓஹோ... அப்படியா; சரி... இப்போ நான் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?''சொல்லுங்க டீச்சர்''நம்ம வாழ்க்கை ஒரு அழகான பயணம். இந்த பயணத்தோட குறிப்பிட்ட இடத்துல தங்கமும் வைரமும் குவிஞ்ச புதையல் நமக்காக காத்துட்டு இருக்கு. நாம அதை நோக்கி போய்கிட்டே இருக்கணும்.'போற வழியில, சின்னச்சின்னதா தங்கம் சிதறி கிடக்கும். அந்த தங்கத்தைப் பார்த்து புதையல் கிடைச்சிருச்சுன்னு நாம நினைச்சிட்டா, நம்ம பயணம் அதோட முடிஞ்சிடும். ஆனா, யாரு அதுல சலனப்படாம தொடர்ந்து பயணிக்கிறாங்களோ, அவங்களுக்கு தான் புதையல். என்ன பர்ஹானா புரிஞ்சுதா?' 'நான் நாளையில இருந்து வேற பஸ்ல வரப் போறேன் டீச்சர்!'படம்: ராட்சசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !