ரவுத்திர வீணை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா லட்சங்கள்ல இழப்பீடு தர்றதும், வனவிலங்கு தாக்குதல்ல பாதிக்கப்பட்டா அலட்சியம் காட்டுறதும் என்னய்யா நியாயம்?மகேஸ்வரி: இந்த ஏப்ரல் 24; ரப்பர் தோட்டத்துல வேலை பார்த்துட்டு இருந்த என் கணவர் பூதலிங்கத்தை புலி தாக்கிருச்சு. பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில 10 நாட்களுக்கும் மேல சிகிச்சை நடந்தது. நிவாரணம் கேட்டு மே 22ம் தேதி உங்க தனிப்பிரிவுக்கு அனுப்பின 'மனு எண் - 8013177'க்கு, 'நடவடிக்கை எடுக்கப்படும்'னு ஜூன் 7ம் தேதி பதில் (ந.க.எண் - 6216) கிடைச்சது. ஆனா, இப்போவரைக்கும் நிவாரணம் இல்லை. பவானி: ஏப்ரல் 24 அன்னைக்கு தோட்ட வேலைக்கு இருசக்கர வாகனத்துல போன என் மகன் ஜெயன் மேல புலி பாய, கடுமையான காயம்; வலது கையில எலும்பு முறிவு; குலசேகரம் அரசு மருத்துவமனையில ஐந்து நாள் சிகிச்சையில இருந்தான். இப்போ, மூன் றரை மாதமா அவன் வேலைக்குப் போகாததால குடும்பம் நடத்த ரொம்ப சிரமப்படுறேன். நிவாரணம் கேட்டு குலசேகரம் வனச்சரக அலுவலகத்துல மே 15ம் தேதி கொடுத்த மனுவுக்கு பதிலே இல்லை!'எங்கள் ஆட்சியில் தமிழக பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்'னு இனியும் சொல்வீங்களாய்யா?- புலி தாக்குதலில் காயமுற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வேண்டும் திட்டவிளை மகேஸ்வரி, ஆண்டிப்பொற்றை பவானி, கன்னியாகுமரி.