வானமே எல்லை!
பரதக்கலை ஆசிரியை மேகலாவின் கைவண்ணத்தில், துணி மற்றும் நெகிழியிலான அலங்கார பொம்மைகள் கவித்துவமாய் ஜொலிக்கின்றன. இவரது சென்னை, குரோம்பேட்டை இல்லமே 'அமேஸிங் டால் மேக்கிங்'கின் முகவரி! இந்த ஆர்வத்தின் துவக்கப்புள்ளி எது?நுாறு ஆண்டுகள் பழமையான மரப்பாச்சி பொம்மைக்கு வண்ணம் தீட்டி அலங்காரம் பண்ணின அந்த தருணத்தை பொம்மைகள் மேல எனக்கு காதல் பூத்த தருணம்னு சொல்லலாம்! அசையும் அங்கங்கள் கொண்ட ஆண், பெண் நெகிழி பொம்மைகளை மரப்பலகையில் பொருத்தி முருகர், ஆண்டாள் திருவுருவங்களா மாத்துறேன். சீமந்த பெண், மணமக்கள் பொம்மைகளை துாரிகை, ஆடை, ஆபரணங்களால மெருகேத்துறேன். இதேமாதிரி, மரப்பலகை அடித்தளத்துல கம்பிகள் துணையோடு துணி பொம்மைகளை உருவாக்குறேன்! கறுப்பு உல்லன் நுாலில் ஜடை, சாட்டின் துணியில் மாலை, முத்து/ மணிகள்/ கற்கள் கலந்த ஆபரணங்கள், அட்டை கிரீடம்னு நான் உருவாக்குற லஷ்மி திருவுருவ பொம்மைகள் பலரோட பூஜையறையில இருக்கு. நவராத்திரி விழாவுக்கான நெகிழி பொம்மைகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. இப்போ, 27 ராமாயண பாத்திரங்களை பொம்மைகளா உருவாக்கிட்டு இருக்குறேன்.63745 36664சிறப்பு பொருள்: ஓரடி உயர அஷ்டலஷ்மிகளின் திருவுருவம் - ரூ.1,800 முதல்