உள்ளூர் செய்திகள்

மைட்டோகாண்ட்ரியாவும், கொரோனா வைரசும்!

வின்சர், இதய கோளாறுகள்ஏற்பட என்ன காரணம் என,முதலில் ஆராய்ச்சி செய்ய துவங்கினோம்.நம் உடல், கோடிக்கணக்கான செல்களால் உருவானது. செல்கள் மிக நுண்ணியமானவை. ஒவ்வொரு செல்லின் உள்ளேயும், 2,000 - 4,000, 'மைட்டோகாண்ட்ரியா' எனப்படும், உறுப்பு உள்ளது. இது, நம் உடலின் அங்கம் இல்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பரிணாம வளர்ச்சியில், மனித செல்களுக்குள் குடியேறி விட்டது. இது, தாயிடம் இருந்து குழந்தைக்கு வருகிறது.மூளை, இதயம், கல்லீரல் என, எல்லா உறுப்பில் உள்ளசெல்களிலும் இது இருக்கிறது.உணவில் இருந்து கிடைக்கும் சக்தியை, மின்சாரமாக மாற்றி, செல்களுக்கு சக்தியை கொடுப்பது, மைட்டோகாண்ட்ரியா. உடல் உறுப்புகள் அனைத்தும், மின் அதிர்வுகளால் இயங்குகிறது; மின் அதிர்வு இல்லாவிட்டால், உடல் உறுப்புகளால் இயங்க முடியாது.உடல் எடையில், 20 சதவீதம் மைட்டோகாண்ட்ரியா உள்ளது. நம் உடலினுள் வந்து குடியேறிய இந்த நுண்ணுயிரி, உடலை இயக்கும் சக்தியாக மாறி விட்டது.மைட்டோகாண்ட்ரியா, மின் அதிர்வு உருவாக்குவதை நிறுத்தி விட்டால், உடல் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.இதய கோளாறு, கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள் என்று, உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும், மைட்டோகாண்ட்ரியா தன் செயலை நிறுத்தி விடுவதே காரணம்.கல்லீரல் கோளாறை எடுத்துக் கொண்டால், மது பழக்கம் அல்லது நீண்ட நாட்கள் சாப்பிடும் மாத்திரைகளால், செல்கள் செயலிழக்கின்றன என்று கூறுகிறோம். உண்மையில், செல்லின் உள்ளே உள்ள, மைட்டோகாண்ட்ரியா அழிந்து விடும்.அதேபோல, கேன்சர் வந்து செல்கள் அழியும் போது அதனுள் உள்ள இந்த நுண்ணுயிரி செயலிழந்து விடும். செல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், மைட்டோகாண்ட்ரியாவால் வாழ முடியாது.

நுண்ணுயிரி

இது ஆரோக்கியமாக இருந்தால், எந்த நோயும் வராது. நுண்ணுயிர் ஆரோக்கியமாக இருக்க, பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது, வைட்டமின் சி. இது ஒரு, கொடையாளி போன்று செயல்படுகிறது.'வைட்டமின் சி' போதுமான அளவு இருக்கும் வரையில், மைட்டோகாண்ட்ரியா நன்றாக வேலை செய்யும்; சரியாக செயல்படும் போது, வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, கேன்சர் என்று எந்த நோயும் வராது. இது தான் அடிப்படை மருத்துவ அறிவியல்.

'வைட்டமின் சி' சத்து கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

மாத்திரை வடிவில், 500 மி.கி., கொடுத்தால், 80 சதவீதம் செரிமான மண்டலக் கழிவாக வெளியேறி விடும். ரத்தத்தில் கலக்கும், 20 சதவீதத்தில், அதிகப்படியான அமில சுரப்பை வெளியேற்றும் போது, வைட்டமின் சி சத்து, 15 சதவீதம் வீணாகி விடும். செல்களுக்கு போய் சேர்வது வெறும், 5 சதவீதம் மட்டுமே.நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு, 10 கிராம் அளவு வைட்டமின் சி தேவை. வைட்டமின் சி குறைபாட்டை போக்க, அதிகபட்சம், 5 கிராம் மட்டுமே மாத்திரையாக தர முடியும்; அதற்கு மேல் கொடுத்தால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடும்.இன்னொரு வழி, ஐ.வி., எனப்படும் ஊசி மூலம் தருவது. இதில், 100 கிராம் தரலாம். 25 கிராம் செல்களில் போய் சேருகிறது.நாம் செலுத்தும் வைட்டமின் சி முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், உடல் ஏற்றுக் கொள்ளும் வடிவத்தில் கொடுக்க வேண்டும்.செல் சுவர்களில், 'பாஸ்போலிபிட்' என்ற கொழுப்பு மூலக்கூறுகள், செல்களின் பாதுகாப்பு அரணாக உள்ளன. இவற்றின் வடிவில், வைட்டமின் சி சத்தை தரும் போது, அவற்றை அதிக பட்சம், செல்லின் உள்ளே இருக்கும் நுண்ணுயிரி எடுத்துக் கொள்ளும்.பழச் சாற்றில், இதன் மூலக்கூறுகளை கலந்து உருவாக்கி உள்ளோம். கேன்சர் நோயாளிகளுக்கு, இந்த பானத்தை தந்தபோது நல்ல பலன் இருந்தது.தற்போது உள்ள சூழலில், வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு தர, தமிழக சுகாதாரத் துறையிடம், சில மாதிரிகளை கொடுத்து உள்ளோம்.பால், முட்டை மஞ்சள் கரு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றில், பாஸ்போலிபிட் உள்ளது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலக்கூறுகளை வைத்தே, இந்த பரிசோதனையை செய்து உள்ளோம்.கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில், இயற்கையிலேயே வைட்டமின் சி சத்து இருந்தது. தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களை போட்டு விளைவித்து, அதன் இயல்பை அழித்து விட்டோம். அதனால் தான், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளது.டாக்டர் மாணிக்கம்மகாலிங்கம்,இயக்குனர்,சக்தி சுகர்ஸ், பொள்ளாச்சி.98430 63952manickam@me.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்