மன அழுத்தமும், உடற்பயிற்சியும்!
செல்வி, கரூர்: மன அழுத்தத்தை குணப்படுத்த முடியுமா?முடியும். உடற்பயிற்சி செய்தால், மன அழுத்தம் வெகுவாகக் குறைவதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நடைபயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ செய்யலாம். ஆனால், இந்த மனநிலையில், உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கமே அற்ற நிலை காணப்படும். வலுக்கட்டாயமாக செய்யத் துவங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.