உள்ளூர் செய்திகள்

தாய்ப்பாலில் வைரஸ் தொற்று இருக்காது!

கருப்பை, கருக்குழாய் உட்பட, எந்த இனப்பெருக்க உறுப்பையும், கொரோனா வைரஸ் பாதிக்கும் என்பதற்கான சான்றுகள், இதுவரையிலும் இல்லை. அதேபோல, கருவில் குழந்தை வளரும் காலத்திலும், சுகப் பிரசவத்திலும், குழந்தைக்கு கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்பு இருப்பதற்கான ஆதாரமும் இதுவரையில் இல்லை.தாய்ப்பால் கொடுக்கும் போது, முழங்கை வரையிலும் சுத்தமாக சோப் பயன்படுத்தி கழுவி, துடைத்து, முககவசம் அணிந்து, தாய்ப்பால் தரலாம்.கொரோனா தொற்று பாதித்த பெண்கள், மார்பகத்தை நன்கு சுத்தம் செய்த பின், தாய்ப்பாலை தனியாக எடுத்து, குழந்தைக்கு தரலாம். தாய்ப்பால் தருவதை தவிர்க்க கூடாது.டாக்டர் ராதிகா.பி, மகப்பேறு மருத்துவர், விசாகபட்டினம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்