உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / அரிய வகை கனிமங்களுக்காக இந்தியாவை சுற்றி நடக்கும் அரசியல் யுத்தம்!

அரிய வகை கனிமங்களுக்காக இந்தியாவை சுற்றி நடக்கும் அரசியல் யுத்தம்!

'தரம் பிரிக்கப்பட்ட அரிய வகை கனிமங்களின் இறக்குமதியில் சீனா தலையிட்டால், வரிகளை 155 சதவீதமாக உயர்த்துவேன்' என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, தங்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுப்பக்கூடாது என, இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது.'நியோடிமியம், டெர்பியம்' என, 17 வகை தனித்தனி மூலக்கூறுகளை அரிய வகை கனிமங்களாக வகைப்படுத்துகின்றனர். இவை, மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள், செயற்கைக்கோள்கள், 'ரேடார்'கள் போன்றவற்றில் பயன் படுத்தப்படுகின்றன.'ஆப்பரேஷன் சிந்துார்' சீனா தற்போது அரிய வகை கனிமங்களை ஏற்றுமதி செய்யும் உலகின் ஒரே நாடாக உள்ளது. எனவே, இதை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.முன்னர் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள், போர் விமானங்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களை மூன்றாம் நாடுகளுக்கு விற்க கட்டுப்பாடுகளை விதித்தன.தற்போது, அதே போன்ற ஒரு தடையை அரிய வகை கனிமங்களுக்கு எதிராக சீனாவும் விதிக்கிறது.அரிய வகை வளங்கள் அல்லது ஆபத்தான தொழில்நுட்பத்தை எதிரி நாடுகள், மூன்றாம் தரப்பினர் மூலம் பெறுவதை தடுப்பதே இதன் நோக்கம். இந்நிலையில், நம் அண்டை நாடுகளில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளை கவனிக்க வேண்டியுள்ளது. முதலில் பாகிஸ்தான், அவர்களுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், அவசரமாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.வன்முறை அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் தரம் பிரிக்கப்பட்ட அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இந்த வகை தனிமங்கள் இருப்பதால், அதை அமெரிக்காவின் பாதுகாப்பின் கீழ் வைக்க அந்நாடு நினைக்கிறது. அந்த பகுதியில் உள்ள கனிமவளங்களை பாதுகாப்பதற்காக, தேவை ஏற்பட்டால் அமெரிக்கா ராணுவ பலத்தை பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறது.அப்பகுதியில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக கலவரங்கள், வன்முறைகள் நடக்கின்றன. அவற்றை இந்திய உளவுத்துறை துாண்டுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.அரிய வகை கனிமங்கள் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே சமநிலையை கையாள்வது, பாகிஸ்தான் முன் உள்ள முக்கியமான அரசியல் சவால்களில் ஒன்று.அதிலும் எப்போது என்ன செய்வார் என கணிக்க முடியாதவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இருப்பதால், இது பாகிஸ்தானுக்கு எளிதான காரியம் இல்லை.மேலும், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது நட்புறவு ஏற்பட்டிருப்பது, இந்த பிரச்னைக்கு புதிய கோணத்தை வழங்குகிறது. ஆப்கனிலும் அரிய வகை கனிமங்கள் அதிகம் உள்ளன. அவர்களுக்கு சீனாவும், ரஷ்யாவும் கூட நண்பர்கள் தான்.ஆப்கன் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதை சீனாவும், ரஷ்யாவும் எப்படி பார்க்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.ராணுவ ஆட்சி அடுத்ததாக நம் அண்டை நாடான மியான்மரில் அரிய வகை கனிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால், அந்த நாடு தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு, ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. அங்குள்ள பல ஆயுதக்குழுக்கள், ராணுவத்துக்கு எதிராக சண்டை போடுகின்றன.பலரும் இதை ஜனநாயக மீட்பு போராட்டம் என்று கூறினாலும், இது அந்த நாட்டின் கனிமவளங்களை குறிவைத்து நடக்கும் சர்வதேச போட்டி. இதில் அமெரிக்காவும், சீனாவும் ஆழமாக இறங்கியுள்ளன.அ ரிய வகை கனிமங்கள் இந்த நுாற்றாண்டின் கச்சா எண்ணெய் என கருதப்படுகிறது. இவை, உலக பொருளாதாரத்தையும், சமூக வளர்ச்சியையும் இயக்கும் முக்கிய சக்தி. மியான்மரின் அரிய வகை கனிமங்கள் இன்று வெறும் இயற் கை வளமல்ல.அது, ஆசியாவின் அரசியல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பொருளாதாரம் அனைத்தையும் பாதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சொத்து. 2017 முதல், மியான்மரின் காசின் மாகாணத்தில் சுரங்கம் அமைத்து, இந்த கனிமங்களை சீனா எடுத்து வருகிறது.இந்த மாகாணத்துக்கு அருகில் உள்ள கடல் வழி வங்காள விரிகுடா. இது, மியான்மர் கடல் எல்லை மற்றும் வங்கதேச கடல் பரப்புக்கு அருகில் உள்ளது. இதனால், இப்பகுதியிலும் அமெரிக்கா, சீனா ஆர்வம் காட்டுகின்றன.போராட்டம் மியான்மர் கடல் எல்லைக்கு அருகில் உள்ள செயின்ட் மார்டின்ஸ் தீவை பயன்படுத்த, வங்கதேசத்திடம் 2024ல் அமெரிக்கா அனுமதி கேட்டதாகவும், அதற்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சம்மதிக்காததால் தான், அவர் ஆட்சி போராட் டம் என்ற பெயரில் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது, மிக சிக்கலான அரசியல் பாதையில் பயணிக்க வேண்டிய சூழலை நம் நாட்டிற்கு ஏற்படுத்தி உள்ளது. நம் கிழக்கு கடற்கரையில் நடக்கும் அனைத்து மாற்றங்களும், மியான்மரின் அரிய வகை கனிமங்களை அணுகும் ஆர்வத்தால் துாண்டப்படுகிறது.- ஸ்ரீபதி நாராயணன் -சர்வதேச விவகாரங்கள் நிபுணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி