நுண்ணறிவுடன் செயல்படும் லேப்டாப்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, தைவானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான 'அசுஸ்', விவோபுக் கே15 ஓ.எல்.இ.டி., எனும் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ஓ.எல்.இ.டி., டிஸ்பிளேவுடன் வெளியாகும் அசுஸ் நிறுவனத்தின் முதல் விவோபுக் வரிசை இதுவாகும். இந்த லேப்டாப், 'இன்டெல் ஐ3, இன்டெல் ஐ 5, இன்டெல் ஐ7 மற்றும் ஏ.எம்.டி., ஆர் 5' ஆகிய நான்கு சி.பி.யு., உள்ளமைப்புகளுடன் வந்துள்ளது. சமீபத்திய 11வது ஜென் இன்டெல் கோர் மூலம் இது இயக்கப்படுகிறது. 15.6 அங்குல முழு எச்.டி., ஓ.எல்.இ.டி., பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிய விவோபுக் சீரிஸில், அசுஸ் நுண்ணறிவு செயல்திறன் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. நுண்ணறிவு செயல்திறன் தொழில்நுட்பம் இருப்பதால், வெப்பநிலைக்கு ஏற்ப, மின் நுகர்வு செயல்திறன் மேம்படுத்தப்படும். இந்த லேப்டாப் வரிசைகள் இன்று முதல் விற்பனைக்கு வருகின்றன. வகையை பொறுத்து, விலை 46,990 ரூபாயிலிருந்து 81,990 ரூபாய் வரை ஆகிறது.