உள்ளூர் செய்திகள்

இடது கைக்கு ஏற்ற மவுஸ்

பிரபல 'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக இரு மவுஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. 'லாஜிடெக் சிக்னேச்சர் எம் 650' மற்றும் 'எம் 650 எல் ஒயர்லெஸ்' என இரு மவுஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கைகளுக்கு எந்த கூடுதல் அழுத்தமும் தராமல், நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில், இந்த மவுஸ்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒயர்லெஸ் மவுஸை, 30 அடி துாரம் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் உள்ள ஏ.ஏ., பேட்டரி, இரண்டு ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.இதில், ஸ்க்ரோலிங் பட்டனையும் சேர்த்து, மொத்தம் ஐந்து பட்டன்கள் உள்ளன. மூன்று வண்ணங்களில் வந்துள்ளன. ஒயர்லெஸ் மவுஸின் விலை 2,995 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !