சிறிய இடம் நிறைந்த ஒளி
'பென்க்யூ' நிறுவனம், இந்தியாவில் இரண்டு வகையான, கம்ப்யூட்டர் மானிட்டர் லைட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் இந்த லைட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.'பென்க்யூ டபுள்யு.ஐ.டி., ஸ்கிரீன்பார்' மற்றும் 'பென்க்யூ டபுள்யு.ஐ.டி., ஸ்கீரீன்பார் பிளஸ்' என இரண்டு லைட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மானிட்டரின் ஒளி, கண்களை கூசாமல் இருக்க உதவும். அத்துடன், மற்றவர்களுக்கு சிரமம் தராத வகையில், மானிட்டரின் முன்னால் 70 செ.மீ., x 40 செ.மீ., அளவிலான இடத்துக்கு தேவையான முழுமையான வெளிச்சத்தை உமிழும் வகையிலும் இருக்கும்.இதில் ஸ்கிரீன்பார் பிளஸ் மாடலில், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை நாம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.விலை:பென்க்யூ டபுள்யு.ஐ.டி., ஸ்கீரீன்பார்: 9,990 ரூபாய்.பென்க்யூ டபுள்யு.ஐ.டி., ஸ்கீரீன்பார் பிளஸ்: 12,990 ரூபாய்.