உள்ளூர் செய்திகள்

சின்னஞ்சிறு கைகளுக்கு சிக்கென ஒரு மவுஸ்

'லாஜிடெக்' நிறுவனம், புதிதாக ஒயர்லெஸ் மவுஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இந்த மவுஸ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைகளை கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.'லாஜிடெக் லிப்ட் வெர்ட்டிகல் எர்கோனாமிக் மவுஸ்' எனும் பெயரில், இந்த புதிய மவுஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வண்ணங்களில் இந்த மவுஸ் வெளிவந்துள்ளது. ரோஜா, வெள்ளை மற்றும் கிராபைட் வண்ணங்களில் வந்துள்ளது.இடது மற்றும் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்கு ஏதுவாக, இரு வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வாய்ப்பு வட அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த மவுசை ஒரே சமயத்தில் மூன்று சாதனங்கள் வரை பயன்படுத்த முடியும். பேட்டரியை பொறுத்தவரை, ஒரு ஏ.ஏ.ஏ., பேட்டரி போதுமானது. இரு ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.விலை: 6,995 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !