உள்ளூர் செய்திகள்

தப்பிலிருந்து தப்பிக்க புதிய வழி

அண்மைக் காலமாக, பல்வேறு புதிய மாற்றங்களையும், வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது, வாட்ஸ் ஆப். அந்த வகையில், தற்போது மற்றுமொரு புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.நாம் ஒரு செய்தியை அனுப்பிய பின், அதில் எதுவும் எழுத்துப்பிழைகள் இருப்பின், அதை 'எடிட்' செய்து கொள்ளக்கூடிய வசதியை வழங்கும் முயற்சியில், வாட்ஸ்ஆப் இறங்கி உள்ளது. பல சமயங்களில், ஏதாவது எழுத்துப் பிழையுடன் ஒரு செய்தியை அனுப்பிய பின், உடனே அதை சரிசெய்து கொள்ள நினைத்தாலும் முடியாமல் போய்விடுகிறது.வேண்டுமானால், அந்த பிழையை குறிப்பிட்டு, மற்றுமொரு குறுஞ்செய்தியை அனுப்பலாம். ஆனால், முதலில் நாம் அனுப்பிய பிழை செய்தி அப்படியே தான் இருக்கும். அது மற்றவர்களுக்கும் 'பார்வேர்டு' செய்யப்படுகிறது. திருத்திக்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொண்ட மற்றொரு செய்தியுடன் சேர்த்து, பெரும்பாலானோர் பார்வேர்டு செய்வதில்லை. இதனால் நம் மதிப்பு பலரிடம் சரியவும் வாய்ப்பிருக்கிறது.இனி இந்த புதிய வசதி வந்தால், ஏற்கனவே அனுப்பிய செய்தியை எடிட் செய்து, இது போன்று எழக்கூடிய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !