சிம்பிளான ஸ்மார்ட் வாட்ச்
'பயர்போல்ட்' நிறுவனம், 27 ஸ்போர்ட் மோடுகள் மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு ஆகியவை கொண்ட ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர்போல்ட் நிஞ்சா புரோ மேக்ஸ்' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச், சதுர வடிவிலானது. 1.6 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் கூடிய இந்த வாட்ச், 9.5 மி.மீ., தடிமன் கொண்டது.இதில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு போன்ற வசதிகள் உள்ளன. எட்டு விதமான வண்ணத் தேர்வுகளில் இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டயலின் முகத்தை பல வடிவங்களில் மாற்றிக் கொள்ள இயலும். தூசி, நீர் புகாது.சார்ஜ் செய்து உபயோகப்படுத்தாமல் இருந்தால், 30 நாட்கள் வரையும்; உபயோகப்படுத்தும் பட்சத்தில் எட்டு நாட்கள் வரையும் சார்ஜ் நிற்கும். சிலிக்கான் ஸ்ட்ராப் கொடுத்திருக்கின்றனர். நேவிகேஷனுக்காக வாட்சின் பக்கவாட்டில் ஒரு பட்டன் கொடுத்திருக்கின்றனர்.விலை: 1,899 ரூபாய்.