45 கிராமில் ஒரு ஸ்மார்ட் வாட்ச்
உள்நாட்டு நிறுவனமான 'பயர் - போல்ட்' அண்மையில் 'பயர் -போல்ட் ரேஜ்' ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. இது 1.28 அங்குல டயல் அளவுடன், முழு எச்.டி., டிஸ்பிளே உடன், வட்ட வடிவில் அறிமுகம் ஆகியுள்ளது.ஓட்டம், நீச்சல், சைக்கிளிங் என மொத்தம் 60 'ஸ்போர்ட் மோடு'களை சப்போர்ட் செய்யும் என்பது கூடுதல் வாய்ப்பு. மேலும் இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, துாக்க கண்காணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோலும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சை ஒரு முறை சார்ஜ் செய்தால், 7 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடைய எடை, வெறும் 45 கிராம் என்பது வரவேற்கத்தக்க அம்சம். இந்த வாட்ச், ஐந்து வண்ணங்களில் வந்து உள்ளது.விலை: 2,199 ரூபாய்.