பர்ஸை பதம் பார்க்காத ஸ்மார்ட் வாட்ச்
உள்நாட்டு நிறுவனமான, 'நாய்ஸ்', புதிதாக 'நாய்ஸ் கலர்பிட் கேலிபர்' எனும் சகாய விலை ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், கலர் டிஸ்பிளே மற்றும் 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்துடன், உடல் வெப்பநிலையை தெரிவிக்கும் வசதியும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் லெவல், இதயத் துடிப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ளலாம். இந்த வாட்சில், 60 வகையான ஸ்போர்ட்ஸ் மோடுகள் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.இந்த வாட்ச் 5 வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை 3,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருப்பினும், அறிமுக விலையாக 1,999 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.