உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட்போன் இனி தேவையில்லை

இனி, 'வாட்ஸ் ஆப்' அரட்டையை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவதற்கு, ஸ்மார்ட்போனுடனான இணைப்பு தேவைப்படாது. அதற்கான வசதியை வாட்ஸ் ஆப் ஏற்படுத்தி உள்ளது. தற்போது வேறு சாதனங்களில் நம்முடைய வாட்ஸ் ஆப் அரட்டையை பயன்படுத்த, அவற்றை ஸ்மார்ட்போனுடன் இன்டர்நெட் வாயிலாக இணைக்க வேண்டியதிருக்கும். ஆனால், இனி அவ்வாறு செய்ய தேவைப்படாது. தனியாகவே பிற சாதனங்களில் அரட்டை வசதியை பயன்படுத்தலாம்.தற்போது, நான்கு சாதனங்கள் வரை பயன்படுத்த முடியும் என்கிறார்கள். அத்துடன், டேப்லெட்டில் பயன்படுத்த இப்போதைக்கு முடியாது என்றும் கூறுகிறார்கள். மேலும் ஐபோன் வகையாறாக்களில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !