நீச்சல் வீரர்களுக்கான வாட்ச்
நீச்சல் வீரர்களை இலக்காக கொண்டு, புதிய ஸ்மார்ட் 'வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, 'கார்மின்!' 'கார்மின் டீஸென்ட் ஜி.1' எனும் புதிய ஸ்மார் ட்வாட்சை, இரு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது.சூரிய ஒளி சக்தி வசதியுடனும், அவ்வசதி இல்லாமலும் என, இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வண்ணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சில், நீச்சல் வீரர்களுக்கான பல்வேறு விதமான 'மோடு'கள் இடம்பெற்று உள்ளன.நீச்சல் குறித்து மட்டுமின்றி, நம் உடல்நலம் குறித்த பல்வேறு கண்காணிப்பு வசதிகளும் இதில் உள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்சை ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 'டைவிங்' மோடில் கிட்டத்தட்ட 25 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். தற்போது அமெரிக்காவில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த வாட்ச், இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.தோராய விலை: சூரிய சக்தி வசதியுடன் : 49,220 ரூபாய்.இவ்வசதி இல்லாமல்: 41,630 ரூபாய்