உள்ளூர் செய்திகள்

மேலும் மூன்று வண்ணங்களில் பீட்ஸ் ஸ்டூடியோ பட்ஸ்

'ஆப்பிள்' நிறுவனத்துக்கு சொந்தமான 'பீட்ஸ்' நிறுவனத்தின் 'பீட்ஸ் ஸ்டூடியோ பட்ஸ்' எனும் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் புதிதாக மேலும் 3 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, மொத்தம் 6 வண்ணங்களில் இந்த இயர்பட்சுகள் கிடைக்கும். முதலில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் அறிமுகம் ஆனது. இப்போது கூடுதலாக நீலம், சாம்பல், இளம் சிவப்பு என 3 நிறங்களில் வந்துள்ளது.புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், விலையில் எந்த மாறுதலையும் மேற்கொள்ளவில்லை. முதலில் அறிமுகம் ஆன 3 வண்ணங்களில் ஆன இயர்பட்சுகள் தற்போது அமேசானில் 8,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, துவக்கத்தில் இதன் விலை, ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம், 14 ஆயிரத்து, 900 ரூபாயாக இருந்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மூன்று நிறங்களும் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !