உள்ளூர் செய்திகள்

அமேசான் எக்கோ ஷோ 10

'அமேசான் எக்கோ ஷோ 10' மூன்றாவது தலைமுறை சாதனம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கர் கொண்ட இந்த சாதனம், அமேசானில் இதுவரை வந்தவற்றில் விலை அதிகமாகவும், மேம்பட்டதாகவும் உள்ளது.இந்த சாதனத்தில், 10.1 அங்குல டிஸ்பிளே பார்ப்பவரின் முகத்தை நோக்கி தானாகவே திரும்பிக் கொள்ளும்.ஸ்பீக்கரில் இரண்டு டுவீட்டர்களும் ஒரு வூபரும் இடம்பெற்றுள்ளன. இந்த சாதனத்தில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், யு டியூப் என அனைத்தையும் கண்டுகளிக்கலாம். மேலும் இதில் பிரவுசரும் கொடுக்கப்பட்டிருப்பதால், இணைய தேடலுக்கும் பயன்படுத்தலாம். இதன் விலை இந்தியாவில், 24,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது அமெரிக்காவில் உள்ள விலையை விட அதிகமே. அங்கு, 18,600 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !