அமேசான் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்
'அமேசான்' நிறுவனம், அதன் முதல் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அமேசான் எக்கோ பட்ஸ் இரண்டாவது தலைமுறை இயர்பட்ஸ், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதியுடன் வந்துள்ளது. இதனால் வெளிப்புற சப்தங்களின் பாதிப்பு இருக்காது.இந்த இயர்பட்சில், தலா மூன்று மைக்குகள் இடம்பெற்றிருப்பதால், போன் அழைப்புகள் மிகவும் துல்லியமாக இருக்கும் என்கிறது, அமேசான். இந்த இயர்பட்சுகளை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., என இரண்டு வகை போன்களிலும் பயன்படுத்தலாம்.'அலெக்ஸா' வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி இருப்பதால், குரல் வழி உத்தரவுகள் வாயிலாக, இந்த இயர்பட்சை செயல்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. யு.எஸ்.பி., டைப் சி சார்ஜர் வாயிலாகவும்; ஒயர்லெஸ் சார்ஜர் வாயிலாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். ஒயர்லெஸ் சார்ஜர் எனும் பட்சத்தில், தனியாக சார்ஜிங் பேடு வாங்க வேண்டியதிருக்கும்.விலை:ஒயர் சார்ஜிங் மாடல்: 11,999 ரூபாய்ஒயர்லெஸ் சார்ஜிங் மாடல்: 13,999 ரூபாய்.