அமேசானின் ரோபோ டாக்சி
அமேசான் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, தனியாக இயங்கி வரும், ஜூக்ஸ் நிறுவனம், அதன் புதிய ரோபோ டாக்சியை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனமாகும் இது.நேராகவோ, பக்கவாட்டிலோ எப்படி வேண்டுமானாலும் செல்லக்கூடிய இந்த வாகனத்தின் உள்ளே, அமர்வதற்கு எதிரெதிரே இரு இருக்கைகள் உள்ளன. நான்கு பேர் தாராளமாக அமரலாம். ஆனால், ஸ்டீரிங் வீல் கிடையாது!அதிகபட்சமாக, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. இந்த வாகனத்தில், ஒயர்லெஸ் சார்ஜர் வசதி, இசை மற்றும் குளிர்சாதனத்தை இயக்குவதற்கான தனித்தனியான கன்ட்ரோல் பேனல்கள் உள்ளன.இந்த டாக்சி சென்றடையும் நேரம், பாதை, இடம் என அனைத்தையும், ஸ்மார்ட் பேனல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில், இந்த வாகனத்துக்கு ஓட்டுனர் கிடையாது!