உள்ளூர் செய்திகள்

கலரை கைவிட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் கீபோர்டு, மைஸ், உள்ளிட்ட துணை பாகங்கள், இனி, 'ஸ்பேஸ் கிரே' எனும், சாம்பல் வண்ணத்தில் வராது என தெரிகிறது.இந்த ஸ்பேஸ் கிரே வண்ணத்துக்கு என, ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இனி இந்த வண்ணத்தில் துணை பாகங்களை தயாரிக்கப்போவதில்லை என தெரிகிறது.சரக்கு இருக்கும் வரை விற்பனை செய்யப்படும் என்பதால், ரசிகர்கள் முந்திக் கொள்வது நல்லது. ஸ்பேஸ் கிரே நிறுத்தப்பட்டாலும், சில்வர் கலர் தொடர்ந்து வெளியிடப்படும் என்கிறார்கள்.இந்த வண்ணம் நிறுத்தப்படுவதை அடுத்து, ஆப்பிள் நிறுவனம், ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் மறுவடிவமைப்புக்கு செல்கிறதா அல்லது, வண்ணமயத்தில் இறங்க இருக்கிறதா என, பல சந்தேகங்கள் சந்தையில் அலையடிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !