ஆப்பிள் ஏர் பாட்ஸ் - 3
'ஆப்பிள்' நிறுவனத்தின் அடுத்த ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன், 'ஆப்பிள் ஏர்பாட்ஸ் - 3' ஆக இருக்கக்கூடும். நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக அளவில் தயாரிப்பதற்கான பணிகள் முழுமையாக இன்னும் முழுமை அடையவில்லை என்று கூறப்படுகிறது.இதற்கு முன், மார்ச், 23ம் தேதியன்று அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டது. இப்போது, இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது.நாளை மறுநாள் நடைபெற இருக்கும், ஆப்பிளின், வசந்த கால நிகழ்ச்சியில், ' ஐபேடு' மாடல்கள், 'ஏர் டேக்ஸ்' மற்றும் ஆப்பிள் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.