உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.,15

ஆப்பிள் நிறுவனம், டபுள்யு.டபுள்யு.டி.சி., எனும், உலகளவிலான டெவலப்பர்கள் கூட்டத்தில், 'ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., 15' இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.இந்த புதிய இயங்குதளத்தில், பல புதிய கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:* இந்த புதிய இயங்குதளத்தை, 'ஐபோன் 6' மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் பயன்படுத்த முடியும். மேலும், புதிய எஸ்.இ., மாடல் போனிலும் பயன்படுத்த முடியும் * இந்த இயங்குதளத்தை பயன்படுத்தும்படி ஆப்பிள் அழுத்தம் கொடுக்காது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். பயனர்கள் விரும்பினால், ஐ.ஓ.எஸ்., 15க்கு மாறிக் கொள்ளலாம் அல்லது ஐ.ஓ.எஸ்., 14 இயங்குதளத்தையே தொடரலாம்* பயனர்கள், 'அப்கிரேடு' செய்யாமல், ஐ.ஓ.எஸ்., 14லிலேயே தொடர்ந்தாலும், அவர்களும் முக்கியமான, பாதுகாப்பு அப்டேட்டுகளை பெறலாம்* 'தற்காலிக ஐகிளவுட்' வசதி தரப்படும். வாடிக்கையாளர்கள் புதிய சாதனத்தை வாங்கும்போது, ஐகிளவுட் 'பேக் அப்'ஐ பயன்படுத்தி, தரவுகளை புதிய சாதனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்* மற்றொரு கூடுதல் அம்சம், 'பைண்டு மை நெட்வொர்க்!' இதன் மூலம் நமது சாதனம் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் காணலாம். சாதனத்தில் பேட்டரி திறன் குறைந்து அணைந்துவிட்டாலும், திருடர்களின் கைக்கு சென்று அணைக்கப்பட்டுவிட்டாலும், இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம்* நம்பகமான மற்றொரு நபரையோ அல்லது குடும்ப உறுப்பினரையோ, 'அக்கவுன்ட் ரெக்கவரி கான்டாக்ட்' ஆக வைத்துக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்டவரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவேளை நமது, 'ஆப்பிள் ஐடி' கணக்கை அணுக முடியாதபோது, அதை மீட்பதற்கான இணைப்பு, மேற்சொன்ன நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்* நாம் ஒருவேளை இறந்துபோனால், நாம் நியமிக்கும் ஒருவரால், நமது கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை அணுக முடியும்* குரல் வழி உத்தரவுகள் பிறப்பிக்க பயன்படும், 'சிரி' மென்பொருளில் ஆங்கிலத்துடன் இந்திய மொழிகளையும் கலந்து பேசலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், பஞ்சாபி என பல மொழிகளை, ஆங்கிலத்துடன் கலந்து பேசலாம்* இந்தியாவுக்காக புதிய அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் - ஆங்கிலம்; உருது - ஆங்கிலம்: தெலுங்கு - ஆங்கிலம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன* 'ஸ்மார்ட் ரிப்ளைஸ்' சேவையில், தமிழ் உள்ளிட்ட, 10 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !