போல்டபிள் போனில் ஆப்பிள் மும்முரம்
ஆப்பிள் நிறுவனம், அதன் முதல், 'போல்டபிள்' ஐபோனை, 2022 செப்டம்பரில் அறிமுகம் செய்யும் வேலையில் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது.பல முன்னணி நிறுவனங்கள், குறிப்பாக, எல்.ஜி., சாம்சங் ஆகிய நிறுவனங்கள், தங்களுடைய போல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் வாடிக்கையாளர்கள், ஐபோனில், போல்டபிள் மாடலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.ஆப்பிள், தன்னுடைய போல்டபிள் போனுக்கான மெட்டீரியலை, சப்ளை செய்வதற்காக, தைவானை சேர்ந்த நிறுவனங்களை அணுகியுள்ளது.மேலும், இந்த போனில் ஓ.எல்.இ.டி., அல்லது மைக்ரோ எல்.இ.டி., ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை ஆப்பிள் பயன்படுத்தும் என்கின்றனர். டிஸ்பிளேயை பொறுத்தவரை, சாம்சங்கிடமிருந்து பெறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.