உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் வி.ஆர்., ஹெட்செட்

பிரபலங்களின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பர். இப்போது அவர்களை விட மிகவும் அதிக கவனிப்புக்கு உள்ளாவது, புகழ்பெற்ற நிறுவனங்கள் தான். குறிப்பாக, 'ஆப்பிள்' போன்ற நிறுவனங்கள் அடுத்து என்ன தயாரிப்பை வெளியிட உள்ளது என்பதை அதன் ஒவ்வொரு அசைவையும் வைத்து உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.அந்த வகையில், காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம், அதன் வி.ஆர்., எனும், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' ஹெட்செட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என கணித்து, செய்திகள் வரத் துவங்கி உள்ளன.ஆப்பிள் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு குறித்து சந்தை ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது. ஆப்பிளின் இந்த ஹெட்செட், மெய்நிகர் உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !