ஆப்பிளின் புதிய அறிமுகங்கள்
ஆப்பிள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், அதன் வசந்த கால நிகழ்ச்சியில், புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். இம்முறை, இரண்டு ஐபேடு புரோ மாடல்கள்; 24 அங்குல ஐமேக்; புதிய வண்ணத்தில் ஐபோன் 12 மற்றும் 12 மினி; புதிய ஆப்பிள் டிவி 4கே ஸ்ட்ரீமிங் சாதனம்; ஏர்டேக் டிராக்கர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.ஐபேடு புரோ மாடல்கள்:இதில், 11 அங்குலம் மற்றும், 12.9 அங்குலம் என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் எம் 1 எஸ்.ஓ.சி., இயங்குதளத்தில் இவை இரண்டும் செயல்படுகின்றன. இதில், 11 அங்குல வைபை மாடல் விலை, 71,900 ரூபாய் ஆகிறது.வைபை பிளஸ் செல்லுலார் மாடல் விலை, 85,900 ரூபாய் ஆகிறது.இதேபோல், 12.9 அங்குல வைபை மாடல் விலை, 99,900 ரூபாய் ஆகிறது. வைபை பிளஸ் செல்லுலார் மாடல் விலை, 1,13,900 ரூபாய் ஆகிறது.இரண்டு மாடல்களுக்கான முன்பதிவும் இம்மாதம், 30ம் தேதி துவங்குகிறது. மே மாதம் பிற்பகுதியில் கையில் கிடைக்கும்.புதிய ஐமேக்இந்த புதிய ஐமேக்குக்கான முன்பதிவும் இம்மாதம், 30ம் தேதி துவங்குகிறது. மே மாதம் பிற்பகுதியிலிருந்து வினியோகம் துவங்குகிறது.சிறப்பம்சங்கள்:24 அங்குலம் ஆப்பிள் எம்1 எஸ்.ஒ.சி., இயங்குதளம். ஏழு வண்ணங்கள் விலை: ரூ. 1,19,900.ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி இந்த இரண்டு மாடல் போன்களிலும், இதுவரை வராத புதிய நீல வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 30ம் தேதி முதல் இவை கிடைக்கும்துவக்க விலை:ஐபோன் 12: ரூ.79,900ஐபோன் 12 மினி: ரூ. 69,900ஆப்பிள் டிவி 4 கே இது ஒரு ஸ்டீரிமிங் சாதனம். இதை ஒரு வீட்டு ஊடக சாதனம் என்றே சொல்லலாம். மென்பொருள் பகுதியை பொறுத்தவரை, இப்போதைக்கு இத்தகைய சாதனங்களில் இதுவே முன்னோடியானதாக இருக்கிறது. இதன் எடை, 425 கிராம். விலை: 32 ஜி.பி., ரூ.18,90064 ஜி.பி., ரூ 20,900ஏர்டேக் டிராக்கர் மிகநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சாதனம், இந்த ஏர்டேக் டிராக்கர். நம் விலையுயர்ந்த பொருட்களில் இந்த ஏர்டேக் ஐ மாட்டிவிட்டால், பின் அதை நாம் டிராக் செய்யலாம். மறந்து எங்கேயாவது விட்டுவிட்டால் கண்டுபிடிப்பதும் எளிது. இம்மாதம், 30 தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.விலை: ஒன்று: ரூ. 3,190, நான்கு: ரூ. 10,900