50 மணி நேரம் தாங்கும்
கிட்டத்தட்ட 50 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான, 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை, 'மிவி' நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'மிவி டுயோபோட்ஸ் எப் 50' எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சில், 13 மி.மீ., 'எலக்ட்ரோ டைனமிக் பேஸ் டிரைவர்'கள் இடம்பெற்று உள்ளன. 'சார்ஜிங் கேஸ்' உடன் சேர்த்து பார்க்கும்போது, இந்த இயர்பட்ஸ், 50 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். 10 நிமிடம் சார்ஜ் செய்தால், கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.நீர்புகாமலிருக்கும் வகையில் 'ஐ.பி.எக்ஸ்., 4' தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதியும் இதில் உள்ளது. இந்த இயர்பட்சை, மைனஸ் 5 டிகிரி செல்ஷியஸ் முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம்.விலை: 999 ரூபாய்.