காதை தட்டி கன்ட்ரோல் செய்யலாம்
தனித்துவமான வளைய வடிவமைப்புடன், 'சோனி லிங்பட்ஸ் டபுள்யு.எப் - எல்., 900' எனும் புதிய 'ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. புதிய வடிவமைப்பால், இந்த இயர்பட்சை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும், சுற்றுப்புற சப்தங்களையும் கேட்க முடியும். மேலும், இதை நாள் முழுக்க பயன்படுத்திக் கொள்ளவும் வசதியானதாக இருக்கும். இந்த இயர்பட்சின் எடை 4.1 கிராம் மட்டுமே. யு.எஸ்.பி., டைப் சி., போர்ட் இணைப்பு வசதியுடன் வந்துள்ளது, இந்த ஆடியோ சாதனம்.இந்த இயர்பட்சை, 'சோனி ஹெட்போன் கனெக்ட்' செயலியை பயன்படுத்தி, செயலிகளுக்கான சப்போர்ட்டை பெறலாம். மேலும் இயர்பட்சை தட்டாமல், காதை தட்டியே இதன் செயல்பாடுகளை கன்ட்ரோல் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தலாம்.விலை: 14,990 ரூபாய்.