உள்ளூர் செய்திகள்

சிட்டிசனின் முதல் ஸ்மார்ட் வாட்ச்

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனமான, சிட்டிசன், தன்னுடைய, முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'சி.இசட்., ஸ்மார்ட்' எனும் பெயரில், இந்த ஸ்மார்ட் வாட்சை, அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, சிட்டிசன். அங்கு டிசம்பர், 14லிருந்து விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் எப்போது வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.வட்டவடிவமான திரையுடன், வலது பக்கத்தில், மூன்று பட்டன்களுடன் வந்துள்ளது. மேலும், மூன்று வண்ணங்களில், கடிகாரத்தின் டயல் கிடைக்கிறது. சிறப்பம்சங்கள்* 1.28 அங்குல அமோல்டு திரை* ஸ்நாப்டிராகன், 3100 பிராசஸர்* 8 ஜி.பி., சேமிப்பகம்* 24 மணி நேரம் தாங்கும் பேட்டரி* தண்ணீர் புகாது* வைபை புளுடூத் இணைப்புவிலை: 29,300 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !