உள்ளூர் செய்திகள்

காம்பேக் ஸ்மார்ட் டிவிகள்

அமெரிக்க பிராண்டு காம்பேக், புதிதாக இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹெக்ஸ் 4கே க்யூ.எல்.இ.டி., வரிசையில், 55 மற்றும் 65 அங்குல அளவுகள் கொண்ட இரண்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.இவை ஆண்ட்ராய்டு டிவிகளாகும். மேலும் இந்த டிவிகளில், டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ்., ட்ரூ சர்ரவுண்டு தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளன. 2.5 ஜி.பி.,ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்டவை.நான்கு எச்.டி.எம்.ஐ., போர்ட் , மூன்று யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இருப்பது கூடுதல் சிறப்பு.விலை:55 அங்குலம்: 59,999 ரூபாய்.65 அங்குலம்: 89,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !