வரப் போகுது: எல்.ஜி., கே - 42
எல்.ஜி., கே - 42 எல்.ஜி., நிறுவனம், இந்தியாவில், குடியரசு தினத்தை முன்னிட்டு, எல்.ஜி., கே - 42 எனும் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த போன், 3 ஜி.பி.ரேம், 64 ஜி.பி., சேமிப்பு திறன்கொண்டதாகும். மேலும், நீடித்து உழைப்பதற்கான ராணுவ தரச் சான்றிதழும் இந்த போன் பெற்றுள்ளது. சாம்பல், பச்சை என இரு வண்ணங்களில் வருகிறது. அத்துடன், 6.6 அங்குல திரையுடன், 4,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் வருகிறது.இரண்டு ஆண்டு வாரன்டியுடன், ஒரு முறை இலவசமாக திரையை மாற்றிக் கொள்ளும் சலுகையும் வழங்குகிறது.விலை: 10,999 ரூபாய்.