உள்ளூர் செய்திகள்

வரப்போகுது - நோக்கியா

'நோக்கியா' பிராண்டில், அடுத்த அறிமுகமாக, 'நோக்கியா 6.3' மற்றும் 'நோக்கியா 7.3' ஆகிய ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. இவை, 'நோக்கியா 6.4' மற்றும் 'நோக்கியா 7.4' எனவும் அழைக்கப்படுகின்றன.இதன் பேட்டரி முறையே, 4,500 எம்.ஏ.எச்., 5,000 எம்.ஏ.எச்., திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இவை, 'பாஸ்ட் சார்ஜிங்' வசதி கொண்டதாகவும் இருக்கும் என தெரிகிறது. இந்த போன்கள், இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது.இதற்கிடையே, அண்மையில், 'நோக்கியா 5.4' மற்றும் 'நோக்கியா சி1 பிளஸ்' ஆகிய பட்ஜெட் போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !