விரைவில் வருகிறது நத்திங் போன் 1
'நத்திங்' நிறுவனம் இயர்பட்சை அறிமுகம் செய்திருந்த நிலையில், அடுத்து ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என பேசப்பட்டு வந்தது. இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பை, வரும் கோடையில், 'நத்திங் போன் 1' அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் நத்திங் நிறுவனத்தின் அறிமுகங்கள், 'ஆப்பிள்' படைப்புகளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நத்திங் போன், சமீபத்திய 'குவால்காம் ஸ்நாப்டிராகன்' பிராசஸர் கொண்டிருக்கும் என்றும்; ஆண்ட்ராய்டு மற்றும் நத்திங் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்றும் தெரிகிறது. சீனாவை சேர்ந்த, 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து விலகி, லண்டனை தலைமையிடமாக கொண்டு, நத்திங் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.