உள்ளூர் செய்திகள்

சாதாரண ஸ்டீரியோவில் டால்பிக்கு இணையான அனுபவம்

'நெட்பிளிக்ஸ்' தளத்தில் '5.1 சர்ரவுண்டு சவுண்டு, டால்பி அட்மோஸ்' என கலக்கலாக படம் பார்ப்பது தனி அனுபவம். ஆனால், வெறும் 'ஸ்டீரியோ' ஸ்பீக்கர் வசதியுடன் மட்டும் இருப்பவர்களால், இந்த அனுபவத்தை பெற முடியாமல் உள்ளது. இதை மாற்றும் வகையில், சென்ஹைசர் நிறுவனத்துடன் இணைந்து, 'ஆம்பியோ 2 சேனல் ஸ்பேஸல் ஆடியோ' தொழில்நுட்பத்தை நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.இதனால், இனி சாதாரண ஆடியோ செட் அப் வைத்திருப்பவர்களாலும், மேம்பட்ட ஆடியோ அனுபவம் பெறலாம். சாதாரணமான டிவியில் இருக்கும் ஸ்பீக்கர்கள், ஸ்டீரியோ சிஸ்டம்கள், ஹெட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகள் என எதிலும், டால்பி அட்மோஸுக்கு இணையான ஆடியோ அனுபவம் பெறலாம்.இந்த ஆம்பியோ தொழிநுட்பம், ஸ்டீரியோ அவுட்புட்டுக்கு பதிலாக, இரண்டு சேனல் ஏ.டி.எம்., அல்லது ஐ.ஏ.பி., ஆடியோ பார்மெட்டாக மாற்றி வழங்கிவிடும். இதனால் எந்தவொரு ஸ்டீரியோ ஸ்பீக்கர் அல்லது ஹெட்போனிலும், டால்பி அட்மோஸ் அல்லது 'எம்பெக் எச்' ஆடியோவுக்கு இணையான அனுபவத்தை பெறலாம்.முதற்கட்டமாக, சில வீடியோக்களில் இந்த வசதியை நெட்பிளிக்ஸ் ஏற்படுத்தி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !