உள்ளூர் செய்திகள்

பவர் பேங்குக்கு சவால் விடும் இயர்பட்ஸ்

பிரபல, 'பிலிப்ஸ்' பிராண்டு உரிமத்தை பெற்றுள்ள, 'டி.பி.வி., டெக்னாலஜி' நிறுவனம், இந்தியாவில் புதிதாக இரண்டு ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை வெளியிட்டுள்ளது. 'பிலிப்ஸ் எஸ்.பி.எச்., 2515 பி.கே.,/10 மற்றும் பிலிப்ஸ் டி.ஏ.டி., 3225 பி.கே.,' என, இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகியுள்ளன.இதில், பிலிப்ஸ் எஸ்.பி.எச்., 2515 பி.கே.,/10 மாடலில் தனிச்சிறப்பு வசதி ஒன்று உள்ளது. இதில், 3,350 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதை கொண்டு, இயர்பட்சுக்கு சார்ஜ் ஏற்ற முடியும் என்பதுடன், கூடுதலாக ஸ்மார்ட்போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு பவர் பேங்க் போலவே செயலாற்றும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 110 மணி நேரம் வரை பாடல்களை கேட்கலாம்.விலை:பிலிப்ஸ் எஸ்.பி.எச்., 2515 பி.கே.,/10 : 9,999 ரூபாய்.பிலிப்ஸ் டி.ஏ.டி., 3225 பி.கே., : 7,990 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !