பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச்
தற்போது 'மெட்டா' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கி இருப்பதாக செய்திகள் கசிகின்றன. இந்நிறுவனம் இரண்டு வித ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும்; அவற்றில் ஒன்று சதுர வடிவிலும், மற்றொன்று வட்ட வடிவிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.சதுர வடிவிலான வாட்ச், கிட்டத்தட்ட ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சை போல இருக்கும் என்றும், கழற்றிக்கொள்ளும் டயல் வசதியுடன் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.வட்ட வடிவிலான வாட்ச், மூன்று கேமராக்களுடன் இருக்கும் என கூறப்படுகிறது.இந்த வாட்சுகளில் எந்த பட்டனும் கிடையாது. எனவே, முழுக்க டச் வசதி வாயிலாகவே கன்ட்ரோல் செய்ய வேண்டும். இந்த இரண்டு வாட்சுகளில் ஒன்று, இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.