உள்ளூர் செய்திகள்

வேகமாக சார்ஜ் ஏற்றலாம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல, 'பாஸில்' நிறுவனம், 'ஜென் 6' எனும் புதிய அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. பாஸில் நிறுவனம், முதன் முறையாக அதன் ஸ்மார்ட்வாட்சை, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜென் 6 ஸ்மார்ட்வாட்ச், குவால்காம் ஸ்நாப்டிராகன் வியர் 4100 + தளத்தில் இயங்கும். இந்த வாட்சுக்கான முன்பதிவு, நேற்று முதல் பாஸில் இணைய தளத்தில் துவங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சை, மற்ற வாட்சுகளை விட வேகமாக சார்ஜ் செய்யலாம் என்றும், அரை மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜ் ஏற்ற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாட்ச், 44 மற்றும் 42 மி.மீ., டயல் அளவு கொண்டதாகும். நான்கு வண்ணங்களில் வரும் இந்த வாட்சின் விலை, 23,995 ரூபாயிலிருந்து 24,995 ரூபாய் வரை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !