உள்ளூர் செய்திகள்

கூகுள் டிவியில் கட்டணமில்லா சேனல்கள்

'கூகுள்' நிறுவனம், அதன், 'கூகுள் டிவி' தளத்தில், இலவச 'ஸ்ட்ரீமிங்' டிவி சேனல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. கூகுள் டிவி, 'ஆண்ட்ராய்டு' அடிப்படையிலான, ஸ்மார்ட் டிவி தளமாகும். இது, 'குரோம்காஸ்ட்' வாயிலாக இயங்குகிறது. மேலும் சோனி, டி.சி.எல்., உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில டிவிகளில் அவற்றுடனேயே இணைத்து வழங்கப்படுகிறது.கூகுள் டிவி ஏற்கனவே, 'நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' உள்ளிட்ட பல்வேறு ஸ்ட்ரீமிங் செயலிகளை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் சேர்த்து, கட்டணமில்லா இலவச சேனல்கள் சிலவற்றையும் வழங்க திட்டமிட்டு உள்ளது.தற்போது பல டிவி தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய டிவிகளில் இலவச ஸ்ட்ரீமிங் சேனல்கள் சிலவற்றை பார்க்கும் வகையில் அவற்றையும் உள்ளடக்கியே வழங்க துவங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !