உள்ளூர் செய்திகள்

கேலக்ஸி பட்ஸ்

'சாம்சங்' நிறுவனம், 'எஸ்10' வரிசை போன்களை, 20ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், தற்போது, அத்துடன் கூடுதலாக, ஒயர்லெஸ் இயர்பட்ஸையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.'சாம்சங் கேலக்ஸி பட்ஸ்' என்று தற்போது குறிப்பிடப்படும் இந்த இயர்பட்ஸ் விலை, 12,100 ரூபாயாக இருக்கலாம் என, கணிக்கப்படுகிறது.இயர்பட்ஸுக்கு, ஒயர்லெஸ் மூலமாக சார்ஜ் செய்வதற்கான, 'பவர்ஷேர்' வசதியுடன், 'கேலக்ஸி எஸ்10 பிளஸ்' ஸ்மார்ட் போன் அறிமுகமாக இருக்கிறது எனவும் பேசப்படுகிறது. மேலும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட் போன், 12 ஜிபி ரேம், 1 டிபி உள்ளீட்டு திறன் ஆகியவற்றுடன் இருக்கும் என்றும் செய்திகள் அலையடிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !