வெள்ளை வண்ணத்தில் கேலக்ஸி பட்ஸ்
சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டின் துவக்கத்தில், அதன், 'கேலக்ஸி பட்ஸ் புரோ ட்ரு ஒயர்லெஸ்' இயர்பட்சை அறிமுகம் செய்தது. அறிமுகத்தின்போது, கறுப்பு, சில்வர், வயலட் என மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்தது.இந்நிலையில், தற்போது, வெள்ளை நிறத்திலும் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனாலும், இன்னும் விற்பனைக்கு விடப்படவில்லை. மேலும், இந்த வெள்ளை வண்ண இயர்பட்ஸ், எந்த நாடுகளில் எல்லாம் கிடைக்கும் என்பது குறித்தும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.