கேலக்ஸி எஸ் 21 எப்.இ.,
சாம்சங் நிறுவனத்தின், 'போல்டபிள் இசட் 3' போனுக்கு அடுத்து, கேலக்ஸி எஸ் 21 எப்.இ., போன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, கேலக்ஸி எஸ் 20 எப்.இ., போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6.4 அங்குல திரையுடன், பஞ்ச் ஹோல் கேமராவுடன் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் பேட்டரி திறனும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அனேகமாக, 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்டிருக்க கூடும்.