உள்ளூர் செய்திகள்

நல்லா படிக்கலாம்

'அமேசான்' நிறுவனம், அடுத்த தலைமுறை, 'கிண்டில் பேப்பர் ஒயிட்'ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த பேப்பர் ஒயிட், 'கிண்டில் பேப்பர் ஒயிட், கிண்டில் பேப்பர் ஒயிட் சிக்னேச்சர்' என இரு மாடல்களில் வந்துள்ளது.இந்த கிண்டில்கள் 6.8 அங்குல திரையுடனும், 'யு.எஸ்.பி., டைப் சி' போர்ட்டுடனும் வந்துள்ளன. இவற்றில் ஒளியை கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. கிண்டில் பேப்பர் ஒயிட் சிக்னேச்சர் மாடலில், 32 ஜி.பி., சேமிப்பகம் உள்ளது. பேஸிக் மாடலில் 8 ஜி.பி., சேமிப்பகம் உள்ளது.பேட்டரியை பொறுத்தவரை, இதுவரை இல்லாத வகையில், 10 வாரங்கள் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் உள்ளது. ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும், பழைய மாடல்களை விட, பலவகைகளிலும் இந்த புதிய மாடல் கிண்டில்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் படிக்கும் அனுபவம் இன்னும் இனிதாக இருக்கும்.பேஸிக் கிண்டில் பேப்பர் ஒயிட், அக்டோபர் 27ம் தேதி முதலும், கிண்டில் சிக்னேச்சர் மாடல், நவம்பர் 4ம் தேதி முதலும் விற்பனைக்கு வருகின்றன.விலை:* கிண்டில் பேப்பர் ஒயிட்: 13,999 ரூபாய்* கிண்டில் பேப்பர் ஒயிட் சிக்னேச்சர்: 17, 999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !