உள்ளூர் செய்திகள்

கூகுள் அசிஸ்டென்டு புதிய வசதி

இனி ஆண்ட்ராய்டு போன்களில் குரல் வழி உத்தரவுகள் பிறப்பிக்க பயன்படும் கூகுள் அசிஸ்டென்டு வசதியை இயக்க போனின் பவர் பட்டனை பயன்படுத்திக் கொள்ள முடியும். கூகுள் அசிஸ்டென்டு சேவையை பெற இப்போது, 'ஓகே கூகுள்' அல்லது, 'ஹை கூகுள்' என அழைக்க வேண்டியிருக்கிறது. அல்லது, போனை, 'ஸ்வைப்' செய்ய வேண்டும்.சில போன்களில், குறிப்பாக நோக்கியா, எல்.ஜி., போன்றவற்றில், கூகுள் அசிஸ்டென்டுக்காக என, பிரத்யேக பட்டன் உள்ளது. ஆனால், இனி போனின், பவர் பட்டனை அழுத்துவதன் மூலம், கூகுள் அசிஸ்டென்டு சேவையை பெறும் வசதியை வழங்க உள்ளது கூகுள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !