பிரமாண்டமான கேமிங் மானிட்டர்
இந்தியாவில் 'ஒடிஸி ஆர்க்' எனும் 55 அங்குல, 4கே வளைவான கேமிங் மானிட்டரை 'சாம்சங்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கடந்த ஆகஸ்டில், அமெரிக்காவில் இந்த மானிட்டர் அறிமுகம் ஆன நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த கேமிங் மானிட்டரை, குறுக்குவாட்டாகவோ அல்லது நெடுக்குவாட்டாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்புகளுள் ஒன்று.இந்த மானிட்டர் 55 அங்குல க்யு.எல்.இ.டி., தொழில்நுட்பம் மற்றும் மினி எல்.இ.டி., லைட்டிங் வசதி கொண்டது. 4கே துல்லியமும் கொண்டது. ஆடியோவைப் பொறுத்தவரை, நான்கு ஸ்பீக்கர்கள்; இரண்டு வூபர்கள் இதில் உள்ளன. 60 வாட் 'அவுட்புட்' தரவல்லது. 'டால்பி அட்மோஸ்' வசதியும் உள்ளது.மேலும், பிற சாதனங்களுடன் இணைப்பதற்கான அனைத்து வகை வசதிகளும் இந்த மானிட்டரில் உள்ளன.விலை: 2,19,999 ரூபாய்.