ஹலோ அமிதாப்ஜி
'அமேசான்' நிறுவனத்தின், 'அலெக்ஸா' சாதனங்களில், இனி அமிதாப்பச்சனின் குரலையும் கேட்கலாம். அவருடன் உரையாடலாம். அவரது தந்தையின் கவிதைகளை கேட்கலாம். அவரது திரையுலக அனுபவங்கள், உத்வேகமளிக்கும் மேற்கோள்கள் போன்றவற்றை அவரது குரலில் கேட்கலாம்.வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களுடைய அலெக்ஸா சாதனங்களில் அமிதாப் பச்சனின் குரலை சேர்த்துக்கொள்ளலாம். அமேசான் ஷாப்பிங் செயலியிலும் இச்சேவை யை பெறலாம். ஆனால் இதற்கு கட்டணம் உண்டு.ஆங்கிலம், ஹிந்தி என இருமொழிகளிலும் அலெக்ஸா சாதனங்கள் வாயிலாக அமிதாப்புடன் உரையாடலாம்.