உள்ளூர் செய்திகள்

குறைந்த எடை அதிக திறன்!

'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக 'பிளாபங்க்ட் பி.டி.டபுள்யு., 09 மோக்ஷா' எனும். 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ், வெளிப்புற சப்தங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான, ஏ.என்.சி., வசதியுடன் வந்துள்ளது.இயர்பட்சை வைப்பதற்கான 'கேஸ்' உடன் சேர்த்து, இதன் பேட்டரி திறன் 60 மணி நேரம் வரை நீடிக்கும் என, பிளாபங்க்ட் தெரிவித்துள்ளது. மேலும், பிற சாதனங்களுடனான புளூடூத் இணைப்பும் மிக வேகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இதில் மூன்று வகையான 'மோடு'கள் உள்ளன. 'நார்மல்' மோடு, இசை கேட்பதற்கானது. ஏ.என்.சி., மோடு, மிகுந்த சப்தங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கானது. அடுத்து உள்ள 'ஆம்பியன்ட்' மோடு, வெளிப்புற சப்தங்களோடு, ஆடியோவையும் சேர்த்து கேட்பதற்கானது. இந்த மோடில், ஆடியோவை கேட்பதுடன், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.மிகவும் எடை குறைவானது, இந்த இயர்பட்ஸ்.விலை: 3,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !